Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Eye operation in Mettur hospital: 16 people lost eye sight.

By   /  June 25, 2016  /  Comments Off on Eye operation in Mettur hospital: 16 people lost eye sight.

    Print       Email

mettur_2908517fமேட்டூர் மருத்துவமனையில் நடைபெற்ற இலவச கண் அறுவை சிகிச்சை. 16 பேர் பார்வை இழந்தனர்.

தேசிய பார்வையிழப்பு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், சேலம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் வாரந்தோறும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

InCorpTaxAct
Suvidha

இதன் ஒருபகுதியாக கடந்த வாரம் மேட்டூர், கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை என 3 நாட்களில், மேட்டூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சரோஜா, பாக்கியம், ஆறுமுகம் உள்ளிட்ட 16 பெண்கள் உள்பட 23 பேருக்கு மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் 2 நாட்களுக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 16 பேருக்கு தலைவலி, கண்களில் சீழ் வடிதல் போன்ற தொந்தரவு ஏற்பட்டு கண்பார்வை பறிபோனது.

இதைத்தொடர்ந்து கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், மீதமுள்ள 8 பேர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை கண் அறுவை சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் ஒரு சிலர் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்ததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் இன்பசேகரன், மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மற்றும் பணியில் இருந்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார்.

பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மேட்டூர் அரசு மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 16 பேரின் கண் பார்வை பறிபோன செயல் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது கண் ஆகும். கண் பார்வை இல்லையெனில் வெளி உலகத்தை அவர்கள் பார்க்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். இந்த தவறுக்கு யார் காரணம்? எவ்வாறு இந்த தவறு நடந்தது? என்பது குறித்து சுகாதாரத்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கண் ஒளி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

–அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →