Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Face Book’s Mark Zuckerberg will chat live with astronauts on June 1st.

By   /  May 29, 2016  /  Comments Off on Face Book’s Mark Zuckerberg will chat live with astronauts on June 1st.

    Print       Email

MENLO PARK, CA - JUNE 20: Facebook CEO Mark Zuckerberg speaks during a press event at Facebook headquarters on June 20, 2013 in Menlo Park, California. Facebook announced that its photo-sharing subsidiary Instagram will now allow users to take and share video. (Photo by Justin Sullivan/Getty Images)

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்களுடன் ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் ஜூன் முதல் தேதி ‘சாட்’ செய்கிறார்.

InCorpTaxAct
Suvidha

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களான டிம் கோப்ரா மற்றும் ஜெப் வில்லியம்ஸ் ஆகியோருடன் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிறுவனராக மார்க் ஜுக்கர்பக் ‘பேஸ்புக் லைவ் வீடியோ கால்’ என்ற செயலியின் மூலம் வரும் ஜூன் மாதம் முதல் தேதி நேருக்குநேர் பேசவுள்ளார்.

அமெரிக்க நேரப்படி அன்று பின்னிரவு 12.55 மணியளவில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமெரிக்க tv-space-escapesவெண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வின் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள் தொடர்பான கேள்விகளை மார்க் ஜுகர்பக் முன்வைப்பார். விண்வெளியில் உள்ள வீரர்கள் அந்த கேள்விகளுக்கான பதில்களை அளிக்கவுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ளவர்கள் ’பேஸ்புக் லைவ்’ மூலமாக இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →