மக்கள் நல திட்டங்களைச் செயல்படுத்துவதில் தெலுங்கானா முதல்வரைப் பின்பற்றவும்- ஜெயாவுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுரை.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் எவை? என்பதை அறிவதற்காக மத்திய உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு நடத்தியதாகவும், அதில் தெலுங்கானா முதலிடம் பிடித்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அம்மாநில முதல்-மந்திரி சந்திர சேகரராவ் இந்தியாவின் சிறந்த முதல்-மந்திரிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.
தெலுங்கானா உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும் போதிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உட்பட எல்லா விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இலக்குகளை அறிவிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவற்றை செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டுகிறது; அங்கு ஊழல் இல்லை.
தொலைநோக்குத் திட்டம் 2023 அறிவிக்கப்பட்டு 4½ ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட பிறகும் அதன் இலக்குகளை எட்டுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழக ஆட்சியாளர்கள் இனியாவது தெலுங்கானா மாநிலத்தைப் போன்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, இதே அணுகுமுறையை ஆட்சியாளர்கள் தொடர்ந்தால் அதன்பின் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.