Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Fraud complaint against Sashikala Pushpa

By   /  August 5, 2016  /  Comments Off on Fraud complaint against Sashikala Pushpa

    Print       Email

sasiசசிகலா புஷ்பா எம்.பி மீது ரூ.20 லட்சம் மோசடி புகார்

பாளையங்கோட்டை சாந்திநகர் 28-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் இன்று வக்கீல் ஒருவருடன் சென்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி மீது மோசடி புகார் மனு அளித்தார்.

InCorpTaxAct
Suvidha

அந்த  மனுவில் கூறியிருப்பதாவது:

நான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் வேறு தொழில் செய்ய முடிவு செய்தேன். அப்போது 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நெடுஞ்சாலைத் துறை மூலம் காண்டிராக்ட் விடுவதாக தகவல் அறிந்தேன். அரசியல்வாதிகள் யாரேனும் சிபாரிசு செய்தால் அந்த கண்டிராக்ட் கிடைக்கும் என்று தெரியவந்தது.
இதையடுத்து 2015-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள சசிகலாபுஷ்பா எம்.பி. வீட்டிற்கு சென்றேன். அங்கு இருந்த அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம் என்னை சசிகலா புஷ்பாவிடம் அறிமுகம் செய்தார். அப்போது காண்டிராக்ட் விவரம் குறித்து அவரிடம் கூறினேன். அதற்கு அவர் அடுத்த வாரம் வருமாறு கூறினார்.

அதன்படி அடுத்த வாரம் எம்.பி. வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர் ரூ.25 லட்சம் கொடுத்தால் காண்டிராக்ட் கிடைக்கும் என்றார். என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என நான் கூறினேன். அதற்கு சசிகலா புஷ்பா, ‘ரூ.5 லட்சம் குறைத்து ரூ.20 லட்சம் கொடு’ என்றார்.

அதற்கு சம்மதித்த நான் 10 நாட்கள் கழித்து எனது நண்பர் பாக்கியசிங் என்பவருடன் சசிகலா புஷ்பா வீட்டிற்கு சென்று அவரது கணவர் முன்னிலையில் ரூ.8 லட்சத்தை முதல் தவணையாக அவரிடம் கொடுத்தேன். காண்டிராக்ட் கிடைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மீதி பணத்தை தரவேண்டும் என எம்.பி. கூறினார். அதன்பிறகு நெல்லையில் நடந்த மருத்துவ முகாமிற்கு சசிகலா புஷ்பா வந்தார். அப்போது அவரிடம் மீதி பணம் ரூ.12 லட்சத்தையும் கொடுத்தேன்.

அதன் பின்பு ஒருவாரம் கழித்தும் எனக்கு காண்டிராக்ட் கிடைக்கவில்லை. இதனால் அடிக்கடி சசிகலா புஷ்பாவை தொடர்பு கொண்டு காண்டிராக்ட் குறித்து கேட்டேன். ஒரு கட்டத்தில் காண்டிராக்ட் வாங்கித் தாருங்கள் அல்லது எனது பணம் ரூ.20 லட்சத்தை திருப்பி கொடுங்கள் என அவரிடம் கேட்டேன். அதற்கு எம்.பி. பணம் தரமறுத்ததுடன் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். என்னிடம் ரூ.20 லட்சம் பணம் மோசடி செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்த சசிகலா புஷ்பா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சசிகலா புஷ்பா  எம்.பி. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நெல்லையில் அவர் மீது பண மோசடி புகார் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →