குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன்கள், ஸ்கூட்டிக்கு நிதி உதவி உட்பட ஏராளமான இலவசத் திட்டங்கள்… தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவிப்பு.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அரசு ஊழியர்களுக்கு வீடுகட்ட கடனுதவி ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும். பேறுகால விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும். பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் இலவச வைஃபை வசதி விரிவுபடுத்தப்படும். மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ மானியம் வழங்கப்படும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் காலை சிற்றுண்டி சேர்க்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும். தாலிக்கு தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு பவுனாக உயர்த்தி வழங்கப்படும். பொங்கலுக்கு கோ-ஆப் டெக்ஸில் துணிகள் வாங்க 500 ரூபாய் மதிப்பிலான கிப்ட் கூப்பன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். பி.ஆர்.அம்பேத்கர் பவுண்டேசன் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும். முதியோர் உதவித் தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும். தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும். புதிய கிரானைட் கொள்கை அமைக்கப்படும்.
வழக்கறிஞர் சேம நல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை மின்சார கட்டணம் கிடையாது. அரசு கேபிள் பயன்படுத்துவோருக்கு இலவச செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும். தமிழகத்திற்குள் ஓடும் நதிகள் இணைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.