Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

G.K.Vasan  contesting  from  Moopanar’s  constituency.

By   /  March 14, 2016  /  Comments Off on G.K.Vasan  contesting  from  Moopanar’s  constituency.

    Print       Email

g-k-vasan_3மூப்பனாரின் பாபநாசம் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டி.

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

அவர் அ.தி.மு.க. அல்லது மக்கள் நல கூட்டணி பக்கம் த.மா.கா. செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கட்சியில் வேட்பாளர் நேர்காணல் நடந்து முடிந்து விட்டது. ஜி.கே.வாசன் பாபநாசம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதி ஜி.கே.வாசனின் சொந்த தொகுதி.

இங்குள்ள கபிஸ்தலம் தான் அவர் பிறந்த ஊர். இங்கு ஜி.கே.மூப்பனாருக்கு தனி செல்வாக்கு உள்ளது. 1952–ல் உதயமான இந்த தொகுதி இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் 8 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2 முறை த.மா.கா. வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க. ஒருமுறையும், அ.தி.மு.க. 2 முறையும் ஒருமுறை சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மூப்பனார் 1989–ல் நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சொந்த ஊர், தந்தை போட்டியிட்ட தொகுதி என்பதால் சென்டிமென்டாக முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட வாசன் விரும்புவதாக த.மா.கா. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர். மூப்பனார், உடையார், படையாச்சி, கள்ளர், தேவர் என்று பல சமூகத்தினரும் உள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →