Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

G.K.Vasan’s  TMC  gets ‘4 Coconut trees’ symbol.

By   /  March 29, 2016  /  Comments Off on G.K.Vasan’s  TMC  gets ‘4 Coconut trees’ symbol.

    Print       Email

த.ம.காவுக்கு ‘நான்கு தென்னை மரங்கள்’- தேர்தல் சின்னம் அறிவிப்பு.951b79eb-2185-410f-90f2-014efc9b9932_S_secvpf

த.மா.கா. முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களம் இறங்குகிறது. தனியாக போட்டியில்லை. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று ஜி.கே.வாசன் அறிவித்து இருந்தார்.

InCorpTaxAct
Suvidha

இந்த தேர்தலில் த.மா.கா.வை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதற்காக பல்வேறு கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

அ.தி.மு.க. அல்லது மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெறலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் ஜி.கே.வாசன் எந்த கூட்டணியில் சேருவார் என்று வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கட்சியின் புதிய சின்னம் அறிமுக விழா இன்று தேனாம்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

கட்சியின் புதிய சின்னமான 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தை அவர் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

த.மா.கா.வுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

சட்டமன்ற தேர்தலில் இது வெற்றி சின்னமாக அமையும். கடந்த 2002–ல் காங்கிரஸ் கட்சியோடு இணைந்தபோது த.மா.கா.வின் சைக்கிள் சின்னமும் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது அந்த சைக்கிள் சின்னம் தெலுங்கு தேசம், உத்தரபிரதேசத்தில் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஒற்றை தென்னை மரமும் வேறு மாநிலத்தில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னந்தோப்பு விவசாயம் சார்ந்தது. பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை எளிதாக புரிந்து கொள்ள கூடியது. எல்லா மரம், செடி கொடிகளை விட தென்னை மரத்தைதான் தென்னம்பிள்ளை மக்கள் பிரியமாக அழைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம், ‘‘எந்த கட்சியுடன் கூட்டணி. எப்போது கூட்டணி அறிவிக்கப்படும்’’ என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. எந்த கூட்டணியும் இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தேர்தல் கள நிலவரங்களுக்கு ஏற்ப நாங்கள் முடிவு எடுப்போம். யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

என்று தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →