Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

G.K.Vasan’s  TMC will join AIADMK alliance.

By   /  April 6, 2016  /  Comments Off on G.K.Vasan’s  TMC will join AIADMK alliance.

    Print       Email

தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி?445884-gkvasan-officilwebsite

காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.

InCorpTaxAct
Suvidha

முதல் தேர்தல் என்பதால் வெற்றிக் கூட்டணி அமைத்து கட்சியை வளர்க்க வாசன் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வந்தார்.

கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க வாசன் முடிவு செய்தார். த.மா.கா. தொண்டர்களும் அதையே விரும்பினார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. 25 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்த்தது. ஒரு மேல்–சபை எம்.பி. பதவியையும் கேட்டது. தங்கள் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தையும் வாங்கியது.

ஆனால் அ.தி.மு.க. தரப்பில் 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்ததுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.  ஆனால் இதை த.மா.கா. ஏற்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்து வந்தது. த.மா.கா. ஒரு முடிவுக்கு வராததால் அ.தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் த.மா.கா.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் கதவு அடைக்கப்பட்டு விட்டதால் த.மா.கா. இனி மக்கள் நல கூட்டணிக்கு செல்ல வேண்டும். அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலை மட்டுமே இருந்தது.

மக்கள் நல கூட்டணியில் சேரும்பட்சத்தில் த.மா.கா.வினர் தங்களுக்கு 42 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அதைவிட கூடுதலாக 1 சீட் ஒதுக்கினால்தான் தங்களுக்கு கவுரவமாக இருக்கும் என்று வலியுறுத்தினர். ஆனால் த.மா.கா.வுக்கு 42 தொகுதிகள் கொடுக்க மக்கள் நலக்கூட்டணியினர் முன்வரவில்லை.

எனவே அ.தி.மு.க.வோடு த.மா.கா. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. தனது நிலையில் இருந்தும் கொஞ்சம் இறங்கி வந்துள்ளது. 15 தொகுதிகள் ஒதுக்கினால் போதும். ஆனால் தென்னந்தோப்பு சின்னத்தில்தான் நிற்போம். அதற்கு அனுதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

அ.தி.மு.க.– த.மா.கா. இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது. எனவே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சேருவது உறுதியாகி விட்டது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →