Loading...
You are here:  Home  >  Community Events  >  Current Article

Garbine Mugurusa beats Serena Williams, claims French open title.

By   /  June 5, 2016  /  Comments Off on Garbine Mugurusa beats Serena Williams, claims French open title.

    Print       Email

muguruza-openவிம்பிள்டனில் வீழ்த்திய செரினாவை பிரெஞ்சு ஓபனில் தோற்கடித்தார் முகுருசா. ஸ்டெபி கிராஃப் சாதனையைச் சமன் செய்ய முடியாமல் செரினா ஏமாற்றம்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் 34 வயதான செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயின் நாட்டின் 22 வயதான முகுருசாவை எதிர்கொண்டார்.

InCorpTaxAct
Suvidha

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்டெபி கிராப் சாதனையை சமன் செய்து விடலாம் என்ற இலக்குடன் செரீனா களம் இறங்கினார். மாறாக இந்த போட்டியில் செரீனாவை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சுவைக்க வேண்டும், அதேவேளையில் கடந்த ஆண்டு விம்பிள்டன் பைனலில் செரீனாவிடம் தோல்வியடைந்ததற்கு பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முகுருசா களம் இறங்கினார்.

BN-OI287_fropen_P_20160604111629அனுபவம் வாய்ந்த செரீனா முகுருசாவை எளிதில் வீழ்த்திவிடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இளம் வீராங்கனை முகுருசா செரீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்தார். செரீனாவின் அதிவேக சர்வீஸ்களை துச்சமாக திருப்பி அனுப்பி பாயிண்டுகளை அள்ளினார். முதல் செட்டில் செரீனா கடுமையான நெருக்கடி கொடுக்க அதை திறமையாக சமாளித்த முகுருசா அந்த செட்டை 7-5 எனக் கைப்பற்றினார்.

முதல் செட்டில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் 2-வது செட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்திற்கு முன் செரீனாவின் ஆட்டம் ஜொலிக்கவில்லை. இதனால் முகுருசா இந்த செட்டையும் 6-4 எனக் கைப்பற்றி 2-0 என செரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சுவைத்தார்.

செரீனா தோல்வியடைந்து ஸ்டெபி கிராஃபின் சாதனையை சமன் செய்ய முடியாமல் ஏமாற்றம் 2016-06-04t151442z_1_lynxnpec530da_rtroptp_3_tennis-open-800
அடைந்தார்.

முகுருசா இதற்கு முன் கடந்த வருடம் விம்பிள்டனில் மட்டும்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தற்போது 2-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி முதல் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →