Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

‘Get well’ message for Sonia Gandhi

By   /  August 4, 2016  /  Comments Off on ‘Get well’ message for Sonia Gandhi

    Print       Email

karunaகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று ராகுல் காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று எழுதிய கடிதத்தில், ”வாரணாசியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தங்களது அன்பான தாயார் சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன்.

InCorpTaxAct
Suvidha

அவர் உடல்நலம் இல்லாமல் இருந்ததால், தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இருப்பினும், இப்போது அவர் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், உடல் நலம் சீராக இருப்பதாகவும் வெளிவரும் செய்தி, என்னையும், தமிழக மக்களையும் பெருமூச்சு விடச்செய்திருக்கிறது.

தங்களது தாயார் விரைவில் குணமடைந்து இயல்பான அரசியல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நான் வாழ்த்தியதாகக் கூறுங்கள். அவர் முழுமையாக உடல் நலம் பெறும்வரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →