Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Girl Baby to Yuvan Shanker Raja

By   /  April 8, 2016  /  Comments Off on Girl Baby to Yuvan Shanker Raja

    Print       Email

201604081807011035_Yuvan-Shankar-Raja-baby-girl-born_SECVPFஇளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவுக்குப் பெண் குழந்தை.

இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் அசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தார். பிரியாணி இவரது 100வது படமாகும்.

InCorpTaxAct
Suvidha

இவரது இசையில் வெளியான பாடல்களில் பெரும்பாலானவை ஹிட் பாடல்களாக அமைந்தன. தற்போது தரமணி, யாக்கை, சென்னை28 ன் இரண்டாம் பாகம், பேரன்பு, கான் ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

யுவன்சங்கர் ராஜா 2005-ல் சுஜன்யா என்ற பெண்ணை மணந்தார். 2007ல் சுஜன்யா விவாகரத்து பெற்றார். 2011ல் ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவதாக மணந்தார். அவரும் பிரிந்துவிட்டார்.

2015 ஜனவரி 1-ம் தேதி ஜபருன்னிசா என்ற பெண்ணை யுவன் சங்கர் ராஜா மூன்றாவதாக மணந்தார். இதற்காக அவர் மதமும் மாறினார். முஸ்லிமாக மாறிய அவர் படங்களில் மட்டும் யுவன்சங்கர் ராஜா என்ற பழைய பெயரையே பயன்படுத்திவந்தார்.

யுவன்சங்கர் ராஜா ஜபருன்னிசா தம்பதிக்கு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தைப் பிறந்தது. நேற்றைய தினம் யுவன் சங்கர் ராஜாவின் தாயார் மறைந்த ஜீவாவின் பிறந்த நாள். அதே நாளில் தனக்குப் பெண் குழந்தைப் பிறந்திருப்பது தன்னுடைய அம்மாவே வந்து பிறந்து இருப்பதாக யுவன் சங்கர் ராஜா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →