Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Glass breaking events continue at Chennai Meenambackam Air port.(more than 63 times)  Inqiry ordered

By   /  May 12, 2016  /  Comments Off on Glass breaking events continue at Chennai Meenambackam Air port.(more than 63 times)  Inqiry ordered

    Print       Email

சென்னை விமானநிலையத்தில் தொடர்ச்சியாக கண்ணாடி உடையும் சம்பவங்கள். ஆய்வு நடத்த உத்தரவு.201605112025474547_Echoes-of-glass-breaking-events-the-minister-instructed-to_SECVPF

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2013–ம் ஆண்டில் இருந்து சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. மேற்கூரைகள் இடிந்து விழுவது, தானியங்கி கண்ணாடி கதவுகள், தடுப்பு கண்ணாடிகள் உடைந்து விழுகிறது. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்து உள்ளன. ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி. நொறுங்கி உள்ளன. இம்சம்பவங்களில் 11 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

கடந்த மாதம் மட்டும் 3 தடவை மேற்கூரை கண்ணாடி நொறுங்கி விழுந்துள்ளது. இதுவரை 63 தடவை இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபற்றிய செய்திகள், பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கண்ணாடி உடைந்து விழும் சம்பவத்தயடுத்து, விமான நிலையத்தை ஆய்வு செய்ய மத்திய மந்திரி  அசோக் கஜபதி ராஜு உத்தரவிட்டு உள்ளார். மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜு சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடையும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளார். செய்ய வேண்டிய பராமரிப்பு பிரச்சினைகளை முடிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆய்வுக்குப் பிறகு, குறைபாடுகளை உடனடியாக சரி செய்யுமாறும் அவர் விமான நிலையங்கள் ஆணைய உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →