Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Gokul Raj Murder Case: Yuvraj arrested again.

By   /  August 25, 2016  /  Comments Off on Gokul Raj Murder Case: Yuvraj arrested again.

    Print       Email

Watch-Yuvraj-Surrender-Arrest-on-Gokulraj-Murder-Case-Live-Video-online-11-10-2015-Yuvaraj-Arrest-Youtube-Videoகோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் கைது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

InCorpTaxAct
Suvidha

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் என்ஜினீயரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ், கடந்த ஆண்டு அக்டோபரில் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார்.இதனையடுத்து ஜாமீன் வழங்க கோரி யுவராஜ் மனுதாக்கல் செய்ததன்பேரில், ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் யுவராஜ் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்து பூக்கடை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

இந்த நிலையில் யுவராஜுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, யுவராஜுக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை திடீரென சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின் யுவராஜை கைது செய்து, எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் முதலில் உறுதி செய்யப்படவில்லை.

இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வாலிடம் கேட்டபோது, “யுவராஜின் ஜாமீனுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதனால் அவரை கைது செய்தோம்” என்று பதில் அளித்தார்.இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் நாமக்கல்லுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

யுவராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

 

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →