Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Government to take own course on second term for Raghuram Rajan – Says Sadananda Gowda

By   /  June 12, 2016  /  Comments Off on Government to take own course on second term for Raghuram Rajan – Says Sadananda Gowda

    Print       Email

FJV0QdVa

ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது பற்றி மத்திய அரசு சுயமாக முடிவெடுக்கும் – மத்திய மந்திரி சதானந்த கவுடா.

InCorpTaxAct
Suvidha

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி ரகுராம் ராஜனுக்கு எதிராக கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதினார்.

கடிதத்தில் ‘இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பில் இருந்து ரகுராம் ராஜனை உடனடியாக நீக்க வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது. மேலும், ரகுராம் ராஜன் மனதளவில் முழுவதுமாக இந்தியனாக இல்லை எனவும் சுப்பிரமணியசாமி கூறி இருந்தார். இந்த நிலையில், நேற்று மத்திய மந்திரி சதானந்த கவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

“இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரை தேர்ந்து எடுப்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பது Raghuram_Rajan--621x414குறித்தும், அந்த கமிட்டி எப்படி கவர்னரை தேர்ந்து எடுக்கும் என்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது குறித்து பொதுவிவாதம் மற்றும் முடிவுகளை வைத்து மத்திய அரசு முடிவு எடுக்காது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு என்று வழிமுறைகள் உள்ளன. அதன்படி சுயமாக முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →