Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Guns have not solve any problems: Mehbooba Mufti

By   /  August 15, 2016  /  Comments Off on Guns have not solve any problems: Mehbooba Mufti

    Print       Email

mehbooba-mufti-340__1395176528துப்பாக்கிகள் அல்ல, பேச்சுவார்த்தை தான் காஷ்மீர் பிரச்சனை தீர்வுக்கான வழி: முதல்-மந்திரி மெகபூபா முப்தி

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார். இதை கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

InCorpTaxAct
Suvidha

இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகள் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், துப்பாக்கிகள் அல்ல, பேச்சுவார்த்தை தான் காஷ்மீர் பிரச்சனை தீர்வுக்காக வழி என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல் முறையாக கொடியேற்றி உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது:

துப்பாக்கி எந்த பிரச்சனையையும் தீர்க்காது. அடல் பிகாரி வாஜ்பேயால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி முடிப்பார் என்று நம்புகிறேன்.

சுயநலன்கள் கொண்டவர்களால் காஷ்மீர் இளைஞர்கள் வன்முறைக்கு தள்ளப்படுகிறார்கள். அழகான காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை மற்றுமொரு சிரியா அல்லது ஆப்கானாக மாறாமல் தடுக்க வேண்டும்.

பிரிவினைவாதிகள் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்றினை எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்குள்ள மற்றும் டெல்லி தலைவர்களால் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →