Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Had expected Sheila Dikshit to quit party and take rest: Says Arun Jaitley

By   /  July 18, 2016  /  Comments Off on Had expected Sheila Dikshit to quit party and take rest: Says Arun Jaitley

    Print       Email

433603-arun-jaitley-3-ptiகட்சியை விட்டு விலகி ஷீலா திட்சித் ஓய்வெடுப்பார் என்று நினைத்தேன்: அருண் ஜெட்லி கிண்டல்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே, இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

InCorpTaxAct
Suvidha

இதனையடுத்து, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்–மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஷீலா திட்சித் ஓய்வெடுப்பார் என்று நினைத்ததாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

புதுடெல்லியில் மோடி அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அருண் ஜெட்லி பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி எல்லா இடங்களிலும் பலவீனமாக உள்ளது. எனவே அவர்கள் ஒவ்வொரு முடிவாக எடுத்து வருகிறார்கள். தற்போது, sheila-dixitஉத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக ஷீலா திட்சித்தை அறிவித்துள்ளார்கள். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்த போதும், அவர் கட்சியில் இருந்து விலகி ஓய்வெடுப்பார் என்று எதிர்ப்பார்த்தேன்.

காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேசத்தில் இந்த முறை வாக்குகளை பெறாது. அதேபோல மற்ற மாநிலங்களிலும் கூட. ஒரே குடும்பத்தை சேர்ந்த தலைவர்கள் வருவதை மாற்றும் வரை நாட்டு மக்கள் அவர்களை ஏற்று கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →