Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Hansika helps people who lives in platform

By   /  July 14, 2016  /  Comments Off on Hansika helps people who lives in platform

    Print       Email

xHansika-Motwani-Hot-Wallpapers-363x420.jpg.pagespeed.ic.NojI-aa3Ioநடைபாதைகளில் தூங்கிய ஏழைகளுக்கு நடிகை ஹன்சிகா போர்வை, சோப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டுகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சமூக சேவைக்கு செலவிடுகிறார். தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 30 குழந்தைகளை தத்தெடுத்து உள்ளார். அந்த குழந்தைகளுக்கான உணவு, படிப்பு செலவுகள், தங்கும் இட வசதி அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்.

InCorpTaxAct
Suvidha

அத்துடன் ஹன்சிகாவுக்கு ஓவியம் வரையவும் தெரியும். வீட்டில் நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்து இருக்கிறார். அவற்றை விரைவில் கண்காட்சியாக வைத்து விற்பனை செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டவும் திட்டமிட்டு உள்ளார்.

சென்னை நகரில் நடைபாதையில் தூங்கிய பலருக்கு ஹன்சிகா உதவியிருக்கிறார். ‘போகன்’ படத்தில் நடிப்பதற்காக சென்னையில் தற்போது அவர் முகாமிட்டு உள்ளார். படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு ஓட்டலுக்கு திரும்பும்போதெல்லாம் நடைபாதையில் ஆண்களும் பெண்களும் போர்த்திக்கொள்ள துணிகள் இன்றி தரையில் படுத்து தூங்கியதை பார்த்தார். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை முடித்து விட்டு கடைக்கு சென்று போர்வைகள், கம்பளி, சோப்பு, பற்பசை போன்றவற்றை வாங்கிக்கொண்டு நள்ளிரவு 1 மணிக்கு தனது உதவியாளர், டிரைவர் ஆகிய இரண்டு பேரை அழைத்துக்கொண்டு நடைபாதையில் வசித்தவர்களை பார்க்க சென்றார். அப்போது அவர்கள் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

ஹன்சிகா தங்கள் அருகில் வந்து நிற்பது அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. தூங்கிக்கொண்டு இருந்த ஒவ்வொருவர் பக்கத்திலும் தலா ஒரு போர்வை, கம்பளி, சோப்பு, பற்பசை போன்றவற்றை வைத்து விட்டு திரும்பி விட்டார். ஹன்சிகா செய்த இந்த உதவி பற்றிய வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →