Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Haryana BJP Chief’s son sent to judicial custody in Chandigarh.

By   /  August 12, 2017  /  Comments Off on Haryana BJP Chief’s son sent to judicial custody in Chandigarh.

    Print       Email

 இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை: அரியானா பா.ஜ.க. தலைவரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் 

 

EIS
EnGeniusInc

 

அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் சமீபத்தில் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளான அந்த பெண், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே, விசாரணைக்காக விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோர் சண்டிகர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அப்போது போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோரை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி கவுரவ் தத்தா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct
    Print       Email

You might also like...

TDP-BJP will win in Kakinada muncipal corporation elections: Kimidi KalaVenktarao

Read More →