Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

HC issues notice to TN Govt on DMK plea on appointing partymen to TNPSC.

By   /  February 3, 2016  /  Comments Off on HC issues notice to TN Govt on DMK plea on appointing partymen to TNPSC.

    Print       Email

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு(டி.என்.பி.எஸ்.சி) கட்சிக்காரர்கள் உறுப்பினர்களாக நியமனம். திமுக ,tnpsc பாமக மனுக்களை ஏற்று அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்.

‘தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.க்கு) 11 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உறுப்பினர்கள், இப்பதவியை பெற போதிய தகுதியை பெற்றிருக்க வில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் அவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இதனைத் தடுக்கவேண்டும்’ என்று திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

இதற்கிடையில், வக்கீல் சமூக நீதிப்பேரவை சார்பில் அதன் தலைவர் கே.பாலு ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு 11 உறுப்பினர்களை நியமித்துள்ளது. இதில், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. கல்வியாளர்கள் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும்.

இவர்களை நியமித்து கடந்த 31–ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். அந்த அரசாசணைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும். மேலும், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அப்பதவியை வகிக்க தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இரண்டு மனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →