வருடத்திற்கு ஒருமுறைதான் குளிக்கிறார். கணவன் மீது மனைவி போலீசில் புகார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பக்பத் நகரைச் சேர்ந்தவர் சியாம்சுந்தர். இவரது மனைவி சுரேகா. இவர் பக்பத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி சங்கரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
எனக்கும் சியாம் சுந்தருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. என் வீட்டுக்காரர் தினமும் குளிப்பதே இல்லை. நான் காலை, மாலை இரு நேரமும் குளிக்கும் பழக்கம் உடையவள். தினமும் என்னால் குளிக்காமல் இருக்க முடியாது. ஆனால் என் கணவர் குளிப்பதை பற்றி கண்டு கொள்வதில்லை. மாதக்கணக்கில் அவர் குளிக்காமல் சுத்தமின்றி உள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று குளித்தார். சமீபத்தில் நான் மிகவும் வற்புறுத்தியதால் ஹோலி பண்டிகை தினத்தன்று குளித்தார். தினமும் சுத்தமாக குளிக்காததால் அவர் மீது நாற்றம் வீசுகிறது. என்னால் அவர் அருகில் கூட போக முடியவில்லை. அவரது நாற்றம் காரணமாக என் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. என் கணவர் தினமும் குளிக்காதது பற்றி அவரது குடும்பத்தினரிடம் பல தடவை சொல்லி விட்டேன். யாரும் என் பரிதாப நிலையை கண்டு கொள்ளவில்லை. மாறாக என்னை திட்டி அவமானப்படுத்துகிறார்கள்.
என் கணவரை தினமும் எப்படி குளிக்க வைப்பது என்று தெரியவில்லை. எனவே போலீசார் தலையிட்டு என் கணவரை எப்படியாவது குளிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். மனுவை படித்துப் பார்த்த போலீஸ் சூப்பிரண்டு ரவிசங்கர் அதை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து விரைவில் உரிய தீர்வு காணும்படி அவர் பெண் போலீசாரை அறிவுறுத்தியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.