Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Hectic campaign by political leaders in RK Nagar By-election.

By   /  April 4, 2017  /  Comments Off on Hectic campaign by political leaders in RK Nagar By-election.

    Print       Email

201704041202401864_RK-Nagar-constituency-political-leaders-election-campaign_SECVPFஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது

 

InCorpTaxAct
Suvidha

 

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடந்தது. 27-ந் தேதி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தல் களத்தில் பலர் இருந்தாலும் அ.தி.மு.க. (அம்மா) அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் ஆகிய மூவருக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க. வேட்பாளர் கங்கைஅமரன், தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன், ஜெ.தீபா ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

கடந்த மாதம் 27-ந்தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பிரசாரம் விறுவிறுப்பு பெற்றது. அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் அதிகபட்சமாக 200-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரம் வருகிற 10-ந்தேதி மாலை நிறைவு பெற உள்ளது. இதற்கு இன்னும் 6 நாட்களே இருக்கிறது. இதன் காரணமாக ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்ட அளவில் சூடு பிடித்துள்ளது.
டி.டி.வி.தினகரன் ஆர். கே.நகரிலேயே முகாமிட்டுள்ளார். காலை, மாலை இரு நேரமும் அவர் திறந்த ஜீப்பில் நின்றபடி ஆதரவு திரட்டி வருகிறார்.

201704041202401864_rk-dina._L_styvpfமக்கள் மனதில் தனது சின்னத்தை பிரபலப்படுத்து வதற்காக அவர் தொப்பி அணிந்து செல்கிறார்.
டி.டி.வி.தினகரனுக்கு சவால் விடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். மதுசூதனன் தினமும் ஒவ்வொரு தெரு வாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அவர் ஆதரவாளர்கள் தொகுதி முழுவதும் மின் கம்பம் சின் னத்தை ஏந்தி செல்வது மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே. நகரில் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஜெயலலிதா மரணத்தில் நி லவும் மர்மத்தை முன் வைத்து கூட்டங்களில் பேசுவதால், பிரசாரம் களை கட்டியுள்ளது.

201704041202401864_rk-stalin._L_styvpfதி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் 2 வாரங்களுக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கி விட்டார். தொகுதி முழுக்க அவர் பல தடவை சுற்றி வந்து விட்டார். மிகவும் வயதான வாக்காளர்களை கண்டால், அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று ஆதரவு கேட்கிறார்.

மக்களோடு மக்களாக நின்று அவர் வாக்கு கேட்பது பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளது. அவருக்கு ஆதரவாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டங்களில் பேசி வருகிறார். மு.க.ஸ்டாலின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசி ஆதரவு திரட்டுவது வரவேற்பை பெற்றுள்ளது.

வெற்றிக்கனியை பறிக்கத் துடிக்கும் இந்த 3 வேட்பாளர்களும் விதம், விதமான தேர்தல் வாக்குறுதிகளை முன் வைத்துள்ளனர். இதன் காரணமாக ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது.

201704041202401864_rk-panner._L_styvpfஓ.பன்னீர்செல்வம், மு.க. ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆகியோர் முற்றுகையால் தொகுதி முழுவதும் பரபரப்பும், விறுவிறுப்பும் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது என்பதால் மூன்று கட்சிகளும் வாக்காளர்களை விரட்டியபடி உள்ளன. இந்த நிலையில் தொகுதி முழுக்க பணப் பட்டுவாடா நடப்பதாகவும் பரிசுப் பொருட்கள் அள்ளி, அள்ளி கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே 256 வாக்குச் சாவடிகளும் பதற்றமானதாக கருதப்படுகிறது.

எனவே தேர்தல் பார்வையாளர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆர்.கே.நகரில் தேர்தல் களம் இதுவரை இல்லாத விறுவிறுப்புடன் காணப்படுகிறது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →