Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Hemamalini paid just 1.75 lakhs for the Govt land worth 70 crores : RTI

By   /  April 24, 2016  /  Comments Off on Hemamalini paid just 1.75 lakhs for the Govt land worth 70 crores : RTI

    Print       Email

376314-hema-malini-70070 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் நடிகை ஹேமா மாலினிக்கு வெறும் 1.75 லட்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

70 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், நடிகை ஹேமா மாலினிக்கு வெறும் 1.75 லட்சம் ரூபாய்க்கு மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு வழங்கியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

பிரபல நடிகையான ஹேமாமாலினி, பாஜக எம்.பி.யாகவும் உள்ளார். மும்பையில் கணவர் தர்மேந்திரா, மகன் மற்றும் மகளுடன் வசித்துவரும் ஹேமா மாலினி, பரத நாட்டிய ஆசிரியையாகவும் உள்ளார்.

சமூக ஆர்வலரான அனில் கல்காலி மும்பை புறநகர் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான தகவலை பெற்றுள்ளார். அதன்படி ஹேமா மாலினிக்கு நடன பள்ளி அமைக்க 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை 1.75 லட்சம் ரூபாய்க்கு பாஜக அரசு வழங்கியுள்ளது. அதாவது சதுர அடி ரூ.87.50-க்கு வழங்கப்பட்டது.

முன்னதாக தனது நடனப் பள்ளிக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு மாநில அரசிடம் விண்ணப்பித்து இருந்தார். அப்போது முன் பணமாக ரூ.10 லட்சத்தை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா அரசு 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை 1.75 லட்சம் ரூபாய்க்கு வழங்கியுள்ளது. ஏற்கனவே வழங்கியுள்ள முன் பணமான ரூ.10 லட்சத்திலிருந்து மீதமுள்ள 8.15 லட்சம் ரூபாயை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

1976-ம் ஆண்டு அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 4-ல் ஒரு பங்கிற்கு ஹேமா மாலினிக்கு நிலம் விற்கப்பட்டுள்ளது. ரூ.350 சதுர அடி மதிப்புள்ள நிலத்தை ரூ.87.50-க்கு வழங்கியுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுக் காரணங்களால் ஹேமா மாலினியால் அந்த நிலத்தை பெற கடந்த 20 ஆண்டுகளாக போராட வேண்டியிருந்தது.

40 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், நடிகை ஹேமாமாலினிக்கு, வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்பட்டு உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் கல்காஅலி ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →