Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Hero’s  helped  me  to  reach this  height – says  Samantha

By   /  February 12, 2016  /  Comments Off on Hero’s  helped  me  to  reach this  height – says  Samantha

    Print       Email

samantha-pics-from-anjaan-movie-for-free-9655என் வளர்ச்சிக்கு கதாநாயகர்களே காரணம் – நடிகை சமந்தா சொல்கிறார்.

விஜய்யுடன் தெறி, சூர்யாவுடன் 24 ஆகிய படங்களில் நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் 100 கிலோ எடையை மூன்றுமுறைத் தூக்கி அதனை வீடியோவில் படம் பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

InCorpTaxAct
Suvidha

சமந்தாவின் எடையே 50 கிலோதான். அவரால் எப்படி 100 கிலோ எடையைத் தூக்க முடிந்தது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வியந்தார்கள். இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டபோது “பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும்” என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது “நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயர்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த வளர்ச்சிக்கு நான் காரணமில்லை. என்னோடு நடித்த கதாநாயகர்களே காரணம். தமிழ் தெலுங்கு படங்களில் பிரபரமான கதாநாயகர்களோடு நடிக்கும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன.

அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் ரசிகர்களை எளிதாகச் சென்று அடைந்தேன். என்னை வைத்துப் படம் எடுத்த டைரக்டர்களும் என்னுடைய முன்னேற்றத்துக்குக் காரணமாக இருந்தார்கள். தொடர்ந்து எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து சிறந்த நடிகை என்ற பெயரைத் தக்கவைக்கப் போராடுவேன். எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் உள்ளது. வேறு எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை” இவ்வாறு சமந்தா கூறினார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →