Loading...
You are here:  Home  >  Movies  >  Bollywood  >  Current Article

Hollywood movie is a grand success – Deepika Padukone is happy.

By   /  February 12, 2017  /  Comments Off on Hollywood movie is a grand success – Deepika Padukone is happy.

    Print       Email

maxresdefault-1ஹாலிவுட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது- தீபிகா படுகோன் மகிழ்ச்சி.

அமெரிக்க ரசிகர்கள் வழங்கி யிருக்கும் வரவேற்பால், மிக அதிகமான உற்சாகத்தில் இருக்கிறார், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன். அவரது அறிமுக ஆலிவுட் படமான ‘டிரிபிள் எக்ஸ்: தி ரிட்டர்ன் ஆப் ஸாண்டர் கேஜ்’, சமீபத்தில் வெளியானதுதான் அந்த உற்சாகத்திற்கு காரணம். இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அவரது ‘டிரிபிள் எக்ஸ்’ படத்திற்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

InCorpTaxAct
Suvidha

மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் அவருடன் உரையாடல்:

ஆலிவுட் பட வெற்றி உங்களுக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியை தந்திருக்கிறது அல்லவா?

ஆமாம். எனக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பில் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். வெளிநாட்டு மக்கள் என் மீது அளவற்ற அன்பையும் பாசத்தையும் பொழிகிறார்கள். ஆலிவுட் திரை உலகம் எனக்கு புதியது. அங்குள்ள சூழல் புதியது என்பதால், கிடைக்கப்போகும் ‘ரிசல்ட்’ எப்படி இருக்குமோ? என்ற கேள்வி எனக்குள் எழத்தான் செய்தது. ஆனால் அன்போடு ஆரத்தழுவி நான் வரவேற்கப்பட்டிருப்பது என்னை நெகிழவும், மகிழவும் வைத்திருக்கிறது.

இந்தியாவில் டிரிபிள் எக்ஸ்படத்துக்கு எந்த அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது?

இந்தியாவில் இப்படம் ‘3டி’யில்தான் வெளியிடப்பட்டது. இங்கும் வரவேற்பு கிடைத்திருப்பதாகவே தயாரிப்பாளர் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார். குறிப்பிட்ட தியேட்டர் களில் மட்டுமே படம் வெளியிடப்பட்ட நிலையில், ஓரளவு நல்ல வசூல் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்தியாவில் இந்தப் படத்துக்கும், எனது கதாபாத்திரத்துக்கும் ரசிகர்கள் அளித்திருக்கும் வரவேற்பு உற்சாகம் தருகிறது. குறிப்பாக பெண்கள் மிகவும் பாராட்டிச் சொல்கிறார்கள். ஆக்‌ஷன் படங்களில் நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

வின் டீசலுடனான உங்கள் நெருக்கம் குறித்த கிசு கிசுக்களை, எல்லா நடிகைகளையும் போல நீங்களும் அடியோடு மறுப்பீர்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீங்களோ அதுபற்றி ஜாலியாக கமெண்ட் அடித்துவிட்டுப் போய்விட்டீர்களே? அதுகுறித்து தற்போது வருத்தப்படுகிறீர்களா?

வருத்தம் ஏதுமில்லை. அந்த விஷயம் குறித்து இனி சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. உண்மையில், அந்த டி.வி. நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் எப்படி ரசித்தார்கள் என்று ஒவ் வொருவரும் எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். அவை மிகவும் வேடிக்கையாகவும், இயல்பாகவும் இருந்தன. ‘அந்த கருத்தை தெரிவித்த விஷயத்தில், நீங்கள் நீங்களாக இருந்தீர்கள்’ என்று பலரும் குறிப்பிட்டிருக்கிறார் கள்.

டி.வி.யில் நீங்கள் தோன்றும் நிகழ்ச்சிகள், பிரியங்கா சோப்ராவின் டி.வி. ஷோக்களுடன் ஒப்பிடப்படுகிறதல்லவா?

யாரையும் யாரோடும் ஒப்பிடுவது சரியானது அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப் பாதை, பயணம் இருக்கிறது.

உங்கள் சினிமா பயணத்தை உங்களது பெற்றோரும் சகோதரியும் எப்படிப் பார்க்கிறார்கள்?

அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள், சந்தோஷப்படுகிறார்கள். எப்போதுமே அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்துவருகிறார்கள். நான் நடந்துகொள்ளும் விதத்தில் அவர்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதை என்னால் உணர முடிகிறது. நான் எங்கிருந்தாலும், அங்கே நான் நடந்துகொள்ளும் விதம் குறித்து அவர்கள் எனக்குச் செய்தி அனுப்புவார்கள். அதைப் பார்க்கும்போதே எனக்குச் சந்தோஷம் பிறக்கும்!

ஆலிவுட் இசைக் காதல் படமான லா லா லாண்ட்’-டில் கதாநாயகனாக ரியான் கோஸ்லிங் நடித் திருக்கிறார். அவரோடு இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தீர்கள். இந்தியாவில் அப்படியொரு படத்தில் நடிக்க உங்களுக்கு ஆசையா?

நாம் இங்கு ஏற்கனவே அம்மாதிரியான இசைக் காதல் படங்களைத்தான் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியப் படங்களில் பெரும்பாலானவை, இசையை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக, சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள். இசையும் நடனமும் நம் வாழ்வின் முக்கிய மான அம்சங்கள். சமீபத்தில் வெளியான ஆலிவுட் படங்களில் ‘லா லா லாண்ட்’ தனித்துத் தெரிவதற்குக் காரணம், அதன் அழகான காதல் கதையும், அது சொல்லப்பட்ட விதமும்தான். ரியான் கோஸ்லிங் அற்புதமான நடிகர். அவர் திரையில் மாயாஜாலம் புரிகிறவர்.

வெளிநாட்டில் எவ்வளவோ நடனங்கள் இருக்க, அங்கும் லுங்கி டான்ஸைஏன் நீங்கள் பிரபலப்படுத்த முயற்சிக்கிறீர்கள்?

நான் வின் டீசலுடன் பங்கேற்ற உரையாடல் நிகழ்ச்சியில், நான் லுங்கி டான்ஸ் ஆடியது எதேச்சையானது. உரையாடலில் பங்குபெற்ற ஒருவர்தான் என்னை அந்த நடனத்தை ஆடச் சொன்னார். பொதுவாக நாம் நாமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். லுங்கி டான்ஸ்க்கு பதில் வேறு எந்த நடனத்தை ஆடச் சொல்லியிருந்தாலும் நான் சந்தோஷமாகவே ஆடியிருப்பேன். இதில் வேடிக்கை என்னவென்றால், ‘லுங்கி டான்ஸை’ இந்தியாவின் ஒரு நடன வடிவம் என்று வின் டீசல் நினைத்துக்கொண்டிருக்கிறார். ‘பிரேக் டான்ஸ்’ மாதிரியான ஒரு நடனம் ‘லுங்கி டான்ஸ்’ என்று தான் நினைத்துக்கொண்டிருந்ததாக, அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

புகழ்பெற்ற எல்லன் ஷோடி.வி. நிகழ்ச்சியில், ‘நான் ஆலிவுட் நடிகர் வின் டீசலுடன் கற்பனையில் வாழ்ந்து குழந்தைகளும் பெற்றுவிட்டேன்என்று நீங்கள் கூறியது இந்தியாவில் அதிர்வுகளை ஏற்படுத்தியதே?

நான் அது தொடர்பான விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, நான் அற்புதமான, சக்திவாய்ந்த பெண்மணியான எல்லனை சந்தித்ததைப் பற்றி பேச நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதுதான் உற்சாகமூட்டும் விஷயம். மற்ற எதையும் விட அதுதான் எனக்குப் பெரிய அனுபவம்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →