Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Home Secretary And Intelligence IG Should Be Changed – DMK To Election Commission

By   /  March 5, 2016  /  Comments Off on Home Secretary And Intelligence IG Should Be Changed – DMK To Election Commission

    Print       Email

‘உள்துறைச் செயலாளர் மற்றும் உளவுத்துறை ஐஜி ஆகியோரை இடமாற்றம் செய்க’- தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு.25-1419483201-dmk-logo-2-600

தி.மு.க. சட்டசபை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் இணை செயலாளர் பரந்தாமன் தலைமை செயலகம் சென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் இன்று 3 புகார் மனுக்கள் கொடுத்தார்.

InCorpTaxAct
Suvidha

அதில், தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, உள்துறை செயலாளர் அபூர்வவர்மா ஆகியோர் மற்ற கட்சியினரின் செல்போன்களை ஒட்டுக்கேட்டு ஆளும் கட்சிக்கு தகவல் தெரிவிப்பதாக அறிகிறோம். எனவே இவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா ஓட்டுச் சாவடிக்கு அலுவலர்களை நியமிப்பதில் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வதாக தெரிகிறது. எனவே அவரையும் மாற்ற வேண்டும்.

முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 22 மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளையும் இட மாற்றம் செய்ய வேண்டும். திருவாரூர், சேலம் மாவட்ட அதிகாரிகளையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

1–1–2016–க்கு பிறகு மாற்றப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை ஆராய்ந்து அதில் தவறு இருந்தால் களைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கேட்டதற்கு, ‘‘மாநில அரசிடம் இதுகுறித்து விளக்கம்

கேட்கப்படும். அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொள்ளும்’’ என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →