Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

How  Director  Mahendran  accepted to act  as villain in ‘Theri’ ?

By   /  March 22, 2016  /  Comments Off on How  Director  Mahendran  accepted to act  as villain in ‘Theri’ ?

    Print       Email

mahendran1_2784646fஇயக்குநர் மகேந்திரன் ‘தெறி’யில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?

‘தெறி’யில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குநர் மகேந்திரன் ஒப்புக் கொண்டது எப்படி என்று படக்குழு தெரிவித்தது.

InCorpTaxAct
Suvidha

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தெறி’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார் பிரபல இயக்குநர் மகேந்திரன். ட்ரெய்லரில் இயக்குநர் மகேந்திரன் பேசும் வசனத்திற்கும், அவருடைய பாத்திரப் படைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இயக்குநர் மகேந்திரனை எப்படி ‘தெறி’யில் நடிக்க வைக்க ஒப்புக் கொள்ள வைத்தார்கள் என்பதை படக்குழுவிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்.

‘தெறி’ கதையில் நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்தவுடன், வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இருந்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே வில்லனாக நடித்திராத ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது இயக்குநர் மகேந்திரனின் வீடியோ பேட்டி ஒன்றைப் பார்த்திருக்கிறார் அட்லீ. இவரை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியிருக்கிறது.

உடனடியாக தயாரிப்பாளர் தாணுவிடம் தனது யோசனையைத் தெரிவித்திருக்கிறார். மகேந்திரனுக்கு போன் பண்ணிய தாணு, உங்கிட்ட கதை ஒன்று கூற வேண்டும் என்று நேரம் வாங்கி அட்லீயை அனுப்பி வைத்திருக்கிறார்.

முதலில் கதையைச் சொல்றேன், இதில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதைப் பண்ணுங்கள். எதுவும் பிடிக்கவில்லை என்றால் கதை எப்படியிருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் என அட்லீ சுமார் இரண்டரை மணி நேரம் முழுக்கதையையும் கூறியிருக்கிறார்.

முழுக்கதையையும் கேட்டுவிட்டு நான் இந்த பாத்திரம் பண்றேன் என்று தேர்வு செய்தது தான் வில்லன் பாத்திரம். அட்லீயும் அதே பாத்திரத்திற்காக தான் மகேந்திரனை சந்தித்திருக்கிறார்.

இப்படத்தில் பல இடங்களில் ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மகேந்திரன். அவருடைய நடிப்பு கண்டிப்பாக யாருமே எதிர்பார்க்காத வகையில் இருக்கும் என்கிறது படக்குழு.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →