Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

How  does  Kumaraswamy’s  son  has  such  a  costliest  car?  Asks  Siddaramaiah.

By   /  February 12, 2016  /  Comments Off on How  does  Kumaraswamy’s  son  has  such  a  costliest  car?  Asks  Siddaramaiah.

    Print       Email

siddaramaiah_karnatka-CMகுமாரசாமியின் மகனுக்கு விலை உயர்ந்த கார் எப்படி வந்தது? சித்தராமய்யா கேள்வி.

சித்தராமய்யாவின் கடிகாரம் பற்றிக் கேட்கப்போன குமாரசாமிக்கு பதிலடியாக பல்வேறு கேள்விகளைப் பொதுக்கூட்டத்தில் கேட்டு பரபரப்பு மூட்டிக்கொண்டிருக்கிறார் கர்நாடக முதல்வர். இப்போது பொதுக்கூட்டத்தை தாண்டி நிருபர்களிடமும் அவர் இதே விஷயம் பற்றிப் பேசியிருக்கிறார். “நான் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து இருப்பதாக குமாரசாமி சொல்கிறார். அந்த கடிகாரத்தை நான் வாங்கவில்லை. அது எனக்குப் பரிசாகக் கிடைத்தது. குமாரசாமி சொல்லும் அளவுக்கு அதன் விலை உயர்ந்தது இல்லை. இப்போதும் சொல்கிறேன். குமாரசாமி ரூ. 5 லட்சம் கொடுத்தால் இந்த கடிகாரத்தைக் கொடுத்துவிடுகிறேன். உடுத்தும் உடை, கைக்கடிகாரம், கண்ணாடி அணிவது போன்ற தனிப்பட்ட விஷயங்கள் பற்றி குமாரசாமி பேசுவது சரியல்ல. இது அவருடைய தரம் தாழ்ந்த அரசியலை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

InCorpTaxAct
Suvidha

குமாரசாமியின் மகன் கோடிக்கணக்கான மதிப்புள்ள விலை உயர்ந்த கார் வைத்துள்ளார். அது எப்படி வந்தது? பல கோடி ரூபாய் முதலீடு செய்து சினிமா தயாரிக்கிறார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? அவரது மகன் உழைத்துச் சம்பாதித்தாரா? குமாரசாமியின் கருத்து கண்ணாடி மாளிகைக்குள் அமர்ந்துகொண்டு கல் வீசுவதுபோல் உள்ளது. இது சரியல்ல.

சியாச்சின் மலையில் சிக்கிய வீரரின் குடும்பத்தினர் தற்போது டெல்லியில் உள்ளனர். அங்கே அவர்களுக்கு வேண்டிய அத்தனை வசதிகளையும் செய்து தரச்சொல்லியும் அவர்களை கர்நாடக பவனில் தங்கவைக்கவும் அத்தனை ஏற்பாடுகளையும் செய்துதரச் சொல்லியிருக்கிறேன். அதற்குள் அவர் குடும்பத்தினரை ஏன் முதலமைச்சர் சென்று பார்க்கவில்லை என்று பாஜகவினர் பேசுகின்றனர். இம்மாதிரி பொறுப்பற்ற பேச்சுக்களைக் குறைத்துக்கொண்டு நியாயமான அரசியல் செய்தால் நல்லது”- இவ்வாறு கூறினார் சித்தராமய்யா.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →