Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

How  to  block  cash  distribution  for  voters?  Vijayakanth  discuss  with  DMDK  lawyers.

By   /  March 6, 2016  /  Comments Off on How  to  block  cash  distribution  for  voters?  Vijayakanth  discuss  with  DMDK  lawyers.

    Print       Email

ஓட்டுக்குப் பணம் தருவதைத் தடுப்பது எப்படி? கட்சி வக்கீல்களுடன் விஜயகாந்த் ஆலோசனை.c6c9eaa3-89be-430a-a65f-5a581f3b7a63_S_secvpf

பணப்பட்டுவாடாவை தடுப்பது குறித்து தே.மு.தி.க. வக்கீல்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

InCorpTaxAct
Suvidha

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறார். அவர் தி.மு.க.வுடன் கூட்டணி சேருவாரா? அல்லது பா.ஜனதா அணியில் சேருவாரா? என்ன முடிவு எடுப்பார்? என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் யாருடனும் பேசவே இல்லை. இதுதொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மக்கள் நலன் கருதி அவர் தைரியமான முடிவு எடுப்பார் என்று தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் அறிக்கை விடுத்தார். இதனால் கூட்டணி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்த் இன்று தே.மு.தி.க. வக்கீல்கள் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோயம்பேட்டில உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது.

தேர்தலின்போது மற்ற கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பது குறித்தும் சட்ட ரீதியாக அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →