Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

I am a big fan of Shivaji Ganesan – Says Rajini Kanth.

By   /  April 11, 2017  /  Comments Off on I am a big fan of Shivaji Ganesan – Says Rajini Kanth.

    Print       Email

201704110248476346_Theater-actor-Rajinikanth-advised-presidentsDistributors_SECVPFநான் சிவாஜியின் ரசிகன்- பாடல் வெளியீட்டு விழாவில் ரஜனிகாந்த் புகழாரம். 

 

InCorpTaxAct
Suvidha

 

 

சிவாஜி கணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘நெருப்புடா’. நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். அசோக்குமார் டைரக்டு செய்துள்ளார். ‘நெருப்புடா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சிவாஜி கணேசன் இல்லத்தில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு பேசியதாவது:–

‘‘விக்ரம் பிரபு நடித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருந்தது. படம் வெற்றி பெறும். சிவாஜி இன்று இருந்தால் எனது தாடியை பார்த்து எனக்கு போட்டியா என்று கேட்டு இருப்பார். அவருக்கு போட்டியாக நடிப்புலகில் அவர் இருக்கும் போதும் யாரும் இல்லை. இனிமேல் ஒருவர் பிறக்கப்போவதும் இல்லை.

‘நான் வாழவைப்பேன்’ படத்தில் நடித்தபோது சிவாஜி கணேசன் அவரது வீட்டுக்கு என்னை பிரியாணி சாப்பிட அழைத்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. சனிக்கிழமை வந்துவிடு என்றார். அவர் சொல்லியிருந்தபடி நானும் சென்றிருந்தேன். பார்த்தால் அங்கு 200 பேருக்கு மேல் குழுமியிருந்தார்கள். அவர்களில் யாரும் சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. எல்லாரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். பிறகுதான் தெரிந்தது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் நிகழ்வாம் இது. பல்வேறு பட்டவர்களை வாரம்தோறும் வரவழைத்து அவர்கள் வீட்டில் சாப்பாடு போடுவார்களாம். இதையெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை.

e68c191b4adab17028404fb51a3a66ccநான் சிவாஜியின் ரசிகன். ‘அண்ணாமலை’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, அந்த படத்தின் இரண்டாவது பகுதியில் சிவாஜி கணேசனை மனதில் வைத்து அவரைப்போல் நடிக்கும்படி என்னிடம் கூறினார். நானும் சிவாஜி இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை மனதில் வைத்தே நடித்தேன். அண்ணாமலை வெளியானதும் அந்த படத்தை பார்த்து விட்டு சிவாஜி கணேசன் என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். படையப்பா படத்திலும் அவருடன் நடித்து இருக்கிறேன்.

சிவாஜி கணேசன் பெயரை காப்பாற்றும் பெரிய பொறுப்பு விக்ரம் பிரபுவுக்கு இருக்கிறது. கும்கி படத்தில் பெரிய நடிகரின் பேரன் என்று இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு நடித்து இருந்ததன் மூலம் தாத்தா பெயரை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நடிகர் பிரபுவும் அற்புதமான மனிதர்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் இங்கு பேசும்போது புதிய படங்கள் பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் 3 நாட்கள் கழித்து வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். அதை நானும் ஆமோதிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கிறோம். அதை விமர்சிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. ஒருவரை வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போட்டு விட்டு நல்லா சாப்பிடு என்று அன்பாகவும் சொல்லலாம். எரிச்சலோடும் சொல்லலாம்.

விமர்சனங்களில் வார்த்தைகள் முக்கியம். குழந்தை இல்லாத ஒரு ராஜா கோவில் குளமெல்லாம் சுற்றினான். நீண்ட காலத்துக்கு பிறகு அவனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜோதிடர்களை அழைத்து ஜாதகம் பார்த்தான். எல்லா ஜோதிடர்களும் இந்த குழந்தையால்தான் உனக்கு மரணம் என்றார்கள். அவர்களை ஜெயிலில் அடைத்தான்.

கடைசியாக ஒரு ஜோதிடர் வந்து இந்த குழந்தை உன்னை விட பெரிய ராஜாவாக வருவான். பல மடங்கு பெயரும் புகழும் சம்பாதிப்பான் என்றான். மன்னன் சந்தோ‌ஷப்பட்டான். யாரையும் காயப்படுத்தாமல் விமர்சனம் செய்ய வேண்டும். நல்ல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

சினிமா துறையில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு எல்லோரும் அந்த படம் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். நாம் மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நினைக்கக்கூடாது. தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வியாபாரம் செய்ய விதவிதமான விளம்பரங்களை செய்வார்கள். அதில் தவறு இல்லை. ஆனால் அந்த விளம்பரங்களை நம்பி தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் ஏமாந்து அதிக விலை கொடுத்து வாங்கி நஷ்டமடைந்து பணம் போய் விட்டதே என்று வருத்தப்படும் நிலைமைகள் இருக்கிறது.

தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் படங்களை வாங்குவதற்கு முன்பு அனுபவம் உள்ளவர்களிடம் இந்த படம் நன்றாக ஓடுமா? வாங்கலாமா? என்றெல்லாம் ஆலோசனைகள் பெற்று அவர்களின் அறிவுரைப்படி அவற்றை வாங்க வேண்டும்’.’  இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகர்கள் சிவகுமார், பிரபு, கார்த்தி, சத்யராஜ், தனுஷ், விவேக், சிவகார்த்திகேயன், பொன்வண்ணன், சின்னி ஜெயந்த், ஐசரி கணேஷ், டைரக்டர்கள் பி.வாசு, விக்ரமன், சுந்தர்.சி, சேரன், விஜய், பிரபு சாலமன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ஈ.ஞானவேல்ராஜா, கதிரேசன், எஸ்.ஆர்.பிரபு, ஏ.எல்.அழகப்பன், ராம்குமார், டி.சிவா, ஆர்.பி.சவுத்ரி, எடிட்டர் மோகன், இசையமைப்பாளர் சீன் ரோல்டன், எம்.பன்னீர்செல்வம், அபிராமிராமநாதன், அருள்பதி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →