Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

I am ready to go any  level  to save the party: TTV Dinakaran.

By   /  September 13, 2017  /  Comments Off on I am ready to go any  level  to save the party: TTV Dinakaran.

    Print       Email

கட்சியைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன்:டிடிவி தினகரன்

கர்நாடகாவில் விடுதியில் தங்கியிருக்கும் எனது ஆதரவு எம்எல்ஏ.,க்களை காவல்துறை உதவியோடு மிரட்டி வருகின்றனர். எனது ஆதரவாளர்களை மிரட்டுவோரை சட்டப்படி சந்திப்போம் என அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

EIS
EnGeniusInc

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்எம்ஏக்கள் 19 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவை பதிவெண் கொண்ட வாகனத்தில் குடகு வந்த தமிழக போலீஸார் , தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் நுழைந்தனர். விடுதி நிர்வாகத்தின் அனுமதி பெற்று, எம்எல்ஏக்கள் சிலரிடம் விசாரணை நடத்தினர். மேலும் நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் மர்ம மரண வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பழனியப்பன் குறித்து கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அங்கு பழனியப்பன் இல்லாததால் போலீஸார் அங்கிருந்து தமிழகத்துக்கு திரும்பினர்.

இந்நிலையில் சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “கர்நாடகாவில் விடுதியில் தங்கியிருக்கும் எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை காவல்துறை உதவியோடு மிரட்டி வருகின்றனர். எனது ஆதரவாளர்களை மிரட்டுவோரை சட்டப்படி சந்திப்போம்.

முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கும்படி காவல் துறையை ஏவி மிரட்டல் விடுத்துள்ளனர். தங்களுக்கு பல கோடி பேரம் பேசுவதாக எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

என்னை ஆதரித்துப் பேசியதற்காக நடிகர் செந்தில் மீது திருச்சியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்” என்றார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு, “கடைசியாக நாங்கள் ஆளுநரை சந்தித்தபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க அவகாசம் கேட்டார். எனவே இன்னும் இரு தினங்கள் பொறுத்திருக்க முடிவு செய்துள்ளோம். பெரும்பான்மை இல்லாத எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என காவல்துறையை ஏவி வருகிறார். ஆனால், கட்சியைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct
    Print       Email

You might also like...

Chief Minister opens new sand quarries to increase personal income: Anbumani.

Read More →