Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

I don’t have love experience, I don’t have time for that – Anushka

By   /  January 19, 2016  /  Comments Off on I don’t have love experience, I don’t have time for that – Anushka

    Print       Email

‘எனக்குக் காதல் அனுபவம் இல்லை; காதலிக்க நேரமும் இல்லை’ நடிகை அனுஷ்கா சொல்கிறார்.6-anushka-shetty-in-size-zero

தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணிக் கதாநாயகியாக இருக்கும் நடிகை அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது என்றும் அவருடைய பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், விரைவில் அவருக்குத் திருமணம் நடக்க இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. அதுபற்றி சிங்கம்-3 படத்தில் சூர்யாவுடன் நடித்துக்கொண்டிருந்த அனுஷ்காவிடம் கேட்கப்பட்டது. அதுபற்றி அவர் கூறியதாவது;

InCorpTaxAct
Suvidha

“எனக்குக் காதலெல்லாம் இல்லை. காதல் என்பது வெறும் கவர்ச்சி. அது ஒரு மாயை. தெளிவில்லாத வயதில் ஏற்படுகிறது. இளம் வயதில் அந்த மாயை எல்லாரையும் பிடித்து ஆட்டுகிறது. வளர்ந்த பிறகு காதலின் பெயரால் செய்த வேலைகளை நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். எனக்குக் காதல் அனுபவம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை.

சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். சினிமாவை மட்டுமே இப்போது காதலிக்கிறேன். என்னுடைய திருமணம் நேரம் வரும்போது நடக்கும். என்னுடைய கணவராக வருபவருக்கு சில தகுதிகள் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

அவரிடம் ஒளிவு மறைவுகள் இருக்கக் கூடாது.எனக்குப் பிடிக்கும் விஷயங்கள் அவருக்கும் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆணைசந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களில் வித்தியாசமான ரோல்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்” இவ்வாறு கூறினார் அனுஷ்கா.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

GATeS 15 th Anniversary and Telangana Formation Day Celebrations

Read More →