Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

‘I have no plans to return to India’- Says Vijay Mallya.

By   /  April 29, 2016  /  Comments Off on ‘I have no plans to return to India’- Says Vijay Mallya.

    Print       Email

h_50115422‘நான் இந்தியாவுக்குப் போகமாட்டேன். லண்டனில்தான் இருப்பேன்’- விஜய் மல்லய்யா அறிவிப்பு.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது.

InCorpTaxAct
Suvidha

இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இங்கிலாந்தில் தங்கியுள்ள விஜய் மல்லையாமீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்தியாவில் விசாரணை நடந்து வருகிறது. எனவே அவரை இங்கிலாந்தில் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய அரசு என்மீது மிகுந்த ஆத்திரத்துடன் இருப்பதால் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

மத்திய லண்டனில் உள்ள மேஃபேர் பகுதியில் விஜய் மல்லையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சுமார் நான்கு மணிநேரம் நீடித்த இந்த பேட்டியின்போது தன்னிலை விளக்கம் அளித்த அவர், வற்புறுத்தலாகவும் பலவந்தத்தாலும் நாடு கடந்து இங்குவந்து வாழ்கிறேன் என குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது;-

இந்தியாவில் இன்று எனக்கு எதிராக நிலவும் சூழ்நிலையை எண்ணிப்பார்க்கும்போது, என்னைப் பற்றிய பொது அபிப்ராயத்தை உருவாக்குவதிலும், எனக்கு எதிராக இந்திய அரசை எரிச்சலடைய வைப்பதிலும் மின்ஊடகங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் இருந்து நான் இந்தியாவுக்கு போக மாட்டேன். இங்கிருப்பது தான் எனக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

எனது விமான நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகளுக்கு நியாயமான முறையில் நான் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த விரும்புகிறேன். ஆனால், எனது பாஸ்போர்ட்டை முடக்குவதாலோ, என்னை கைது செய்வதாலோ அவர்களுக்கு வேறெந்தப் பணமும் அவர்களுக்கு வந்துவிடப் போவதில்லை.

நான் நிச்சயமாக இந்தியாவுக்கு திரும்புவேன். ஆனால், தற்போது அங்கிருந்து எனக்கு எதிராக வேகமாகவும், ஆவேசமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்திய அரசு என்ன செய்யப் போகிறதோ என்று எனக்கு தெரியவில்லை.

என்னுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்ட வேகத்தை பார்க்கும்போது இதன் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றியும் இந்திய அரசின் உள்நோக்கத்தையும் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. இந்த நிலையில் லண்டனில் இருந்து நான் இந்தியாவுக்கு போக மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →