Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

I Want to return to India. But I don’t know How I will be treated – Vijay Mallya

By   /  March 13, 2016  /  Comments Off on I Want to return to India. But I don’t know How I will be treated – Vijay Mallya

    Print       Email

VijayMallya_3C_--621x414இந்தியாவுக்குத் திரும்பவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. விஜய் மல்லய்யா கூறுகிறார்.

அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பிரபல ஆங்கில பத்திரிகைக்கு ‘இமெயில்’ மூலம் பேட்டியளித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

ஒரு கிரிமினலாக தனக்கு முத்திரை குத்தப்பட்டுள்ளது தொடர்பாக இந்த பேட்டியின்போது வருத்தம் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது:-

பெரியதொழில் ஆனாலும், சிறியதொழில் ஆனாலும் வியாபாரங்களில் சவால்களும், சரிவும் இருப்பது சகஜமானது என்பது மக்களுக்கு தெரியும். வங்கிகளும் இதை எல்லாம் தெரிந்தே கடன் தொகைகளை வழங்கியுள்ளன. சிறந்த நோக்கங்களை கொண்ட என்னை வில்லனாக சித்தரிக்காதீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளை திரித்துவிடுவதைப்போல் என்னுடைய வார்த்தைகளும் திரித்து வெளியிடப்படலாம் என்பதற்காகவே நான் மவுனமாக இருக்கிறேன்.

நான் வெளிநாட்டுக்கு வருவது இது முதல்முறை அல்ல, ஆனால், ஊடகங்கள் என்னைப்பற்றிய பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. எப்போதுமே, வெளிப்படையான திறந்த புத்தகம்போல் வாழ்ந்துவந்த என்னை தலைமறைவு வாழ்க்கை வாழும்நிலைக்கு தள்ளியதற்காக வருத்தப்படுகிறேன்.

இந்தியாதான் எனக்கு தேவையான அனைத்தையும் தந்தது. என்னை விஜய் மல்லையாவாக மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வைத்தது. மற்றவர்களும் என்னைப்போல் வாழ நான் உதவி செய்துள்ளேன். அடிப்படையில் நான் ஒரு இந்தியன். நான் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லவே விரும்புகிறேன், ஆனால், எனது தரப்பை விளக்கிக்கூறும் நியாயமான வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →