Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

I will campaign DMK – Cong  alliance – Says Nagma. willing to contest from Tamil nadu

By   /  February 17, 2016  /  Comments Off on I will campaign DMK – Cong  alliance – Says Nagma. willing to contest from Tamil nadu

    Print       Email

திமுக காங்கிரஸ் கூட்டணிக்குப் பிரச்சாரம் செய்வேன் – நக்மா அறிவிப்பு.download (4)

திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரசின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முகப்பேரில் நடைபெற்றது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

காமராஜர், கக்கன் போன்ற தலைசிறந்த தலைவர்கள் தமிழக காங்கிரசில் இருந்து மக்கள் பணியாற்றி உள்ளார்கள். பீகாரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.

காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை மத்திய பா.ஜனதா அரசு முடக்குகிறது. காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி ஊழல் கூட்டணி என்று கூறும் பா.ஜ.க.வினர், வியாபம் ஊழல், லலித்மோடி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜின் பங்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தங்கள் மீது இருப்பதை மறந்து விட்டார்கள்.

பிரகாஷ் ஜவ்டேகர், காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணியை பூஜ்ய கூட்டணி என்று கூறி இருப்பது கண்டத்திற்குரியது.

காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி நட்பு ரீதியான கூட்டணி. அந்த கூட்டணி வெற்றி பெற மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும். தி.மு.க. விரும்பினால் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்வேன்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் இலவசங்கள் மட்டுமே மாநில அரசு வழங்கி உள்ளது. இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு வழங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து போட்டியிடுவதற்கு நக்மாவும் காங்கிரஸில் மனு கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

-ரயன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →