நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். நடிகை இலியானா.
விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலியானா. இந்தி, தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராபர் ஆண்ட்ரூவுடன் இலியானாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இலியானா ஏற்கனவே ஒருவரை காதலித்ததாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்து விட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இது குறித்து இலியானா அளித்த பேட்டி வருமாறு:–
‘‘ஆண், பெண்கள் காதல் வயப்படும்போது கனவுலகில் மிதப்பார்கள். ஒருவரையொருவர் உயர்வாக பேசுவார்கள். நீதான் என் உலகம் என்றும் புகழ்வார்கள். ஆனால் காதலித்து விட்டு பிரிய நேர்ந்தால் இருவரும் திட்டிக்கொள்வதும் சண்டைபோடுவதுமாக மாறி விடுகிறார்கள். இது சரியான செயல் அல்ல. நான் ஏற்கனவே காதலித்து இருக்கிறேன். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டேன்.
ஆனால் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டவில்லை. நீ உன் வழியில் செல் நான் என் வழியில் போகிறேன் என்று விலகி விட்டோம். பகை உணர்வு காட்டவில்லை. தரக்குறைவாகவும் பேசவில்லை. அதே நேரம் என் முன்னாள் காதலனிடம் நான் நட்பாகவும் இல்லை. காதலித்து பிரிந்தவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். காதலித்து ஏமாற்றுபவர்களை பழிவாங்க நினைக்க கூடாது.
எனக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்கிறார்கள். நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். இப்போது எனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது.’’
இவ்வாறு இலியானா கூறினார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.