Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Identify and isolate corrupt ministers, Modi asks parties

By   /  July 17, 2017  /  Comments Off on Identify and isolate corrupt ministers, Modi asks parties

    Print       Email

ஊழல்வாதிகளிடம் இருந்து விலகியிருங்கள்: அரசியல் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை

ஊழல்வாதிகளிடமிருந்து விலகியிருக்குமாறு அரசியல் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

EIS
EnGeniusInc

நாடாளுமன்றத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஊழலில் ஈடுபடுவதென்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதனல், மக்கள் மத்தியில் பொது வாழ்க்கையின்மீது ஈடுபடுவோர் மீது சந்தேகம் உருவாகியுள்ளது. ஊழலை ஒழிப்பதில் அனைத்து அரசியல்தலைவர்களும் தலைமை ஏற்க வேண்டும்.

ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து அரசியல் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் விசாரணைகளை சரியாக செயல்படுத்த அரசியல் தலைவர்கள் உதவ முன்வர வேண்டும். ஊழல்வாதிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது என்றும் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

நாளை (திங்கள்கிழமை) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவையும் அவர்கள் உறவினர்களையும் மனதில் வைத்தே இதை பிரதமர் பேசியதாக கூறப்படுகிறது.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct
    Print       Email

You might also like...

Chief Minister opens new sand quarries to increase personal income: Anbumani.

Read More →