Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

If DMK comes to power it will be a democratic rule –Says Karunanidhi

By   /  May 6, 2016  /  Comments Off on If DMK comes to power it will be a democratic rule –Says Karunanidhi

    Print       Email

13178889_1195937050418498_3882566560195852782_nதமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கும் – சோனியா காந்தி கூட்டத்தில் கருணாநிதி பேச்சு.

சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோர் பங்கேற்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அப்போது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பேசியதாவது:-

InCorpTaxAct
Suvidha

இந்த விழாவில் பேசிய சோனியா காந்தி தமிழ்நாட்டில் உள்ள நிலையையும் ஆட்சியின் நிலையையும் உங்களுக்குப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் திமுக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் செயல்படுகின்றன. ‘ஆதரித்தபோதும் எதிர்த்த போதும் இருநிலைக் கொள்கையிலும் கருணாநிதி உறுதியாக இருப்பவர்’ என்று இந்திரா காந்தி கூறியதை தமிழ்நாடும் நானும் இன்னும் மறக்கவில்லை.

திமுக காங்கிரஸ் கட்சிகளுக்குள்ள உறவு ஆழமானது., உறுதியானது. இப்போதும் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தமிழகத்திற்குத் தந்த சில திட்டங்களை மறக்கமுடியாது. ரூ.37 ஆயிரம் கோடியில் சாலைகள் மேம்பாலங்கள் துறைமுகங்கள் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம், ஒசூரில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம், சென்னை கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், திருச்சியில் இந்திய வேளாண்மைக் கல்வி நிறுவனம், எனது தொகுதியான திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம், பொடா சட்டத்தை ரத்து செய்தது போன்ற திட்டங்களை என்றைக்கும் மறக்க முடியாது.

ரூ.100 செலவில் மதுரையில் தமிழ்தாய் சிலை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். ஆனால் மதுரையிலே தேடி தேடி பார்த்தோம் ஆனால் சிலையை காணவில்லை. கட்டினால் தானே சிலை இருக்கும்.

சட்டம் ஒழுங்கு தமது ஆட்சியில் சீராக உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

7567 கொலைகள் நடைபெற்றுள்ளன. 11,745 கொலை முயற்சிகள் அரங்கேறியுள்ளன. பெண்கள் மீது 2792 வன்முறை சம்பவங்களும் , தாழ்த்தப்பட்டோர் மீது  6429 வன்முறை சம்பவங்களும், 7,454 கடத்தல் சம்பவங்களும், 11,630 கலவரங்களும் நடைபெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது ஒரு ஜனநாயக கட்சியின் ஆட்சியாக இருக்கும், மதசார்பற்ற கட்சியின் ஆட்சியாக இருக்கும்.

இவ்வாறு தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →