Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

If  PMK  comes  to  power  we  will stop  all  free  schemes – says  Anbumani

By   /  February 10, 2016  /  Comments Off on If  PMK  comes  to  power  we  will stop  all  free  schemes – says  Anbumani

    Print       Email

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசத்திட்டங்கள் எதையும் கொண்டுவரமாட்டோம் –அன்புமணி ராமதாஸ்.

The Union Minister for Health & Family Welfare, Dr. Anbumani Ramadoss briefing the media after his meeting with the Health Ministers of Polio affected states Delhi, UP, Bihar, Uttaranchal, Jharkhand, MP, Haryana and Maharashtra, in New Delhi on September 21, 2006.

Suvidha
Biryani Pot

 

நாமக்கல் மாவட்ட பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் மதுஒழிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

ஒருகாலத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மது குடிப்பார்கள். ஆனால் தற்போது 12 வயது மாணவன் மதுகுடிக்கும் அவலநிலை இருந்துவருகிறது. மதுவால் ஏராளமான இளைஞர்கள் விபத்து மற்றும் நோய்பாதிப்பால் இறந்து விடுகின்றனர். இதனால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. இதுதவிர பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. வெற்றிபெறும். நான் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்குத்தான்.

50 ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இலவசங்களை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை கொடுக்கமாட்டோம். மாறாக இலவசகல்வி, படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுப்போம். சுயமரியாதையுடன் வாழவழிவகை செய்வோம். ஒவ்வொருவர் குடும்பத்திலும் முன்னேற்றம் கொண்டுவருவோம்.

நான் மத்திய மந்திரியாக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்தேன். தற்போது அந்த திட்டம் 22 மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. 25 லட்சம் பேரை காப்பாற்றி உள்ளது. பா.ம.க. வெற்றிபெற்று நான் முதல்-அமைச்சராக பதவிஏற்றால், தேர்தல் அறிக்கையில் சொல்லிய அத்தனை திட்டங்களையும் 2 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன்.

ஒருவேளை செய்யமுடியவில்லை என்றால் பதவி விலகுவேன். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரசுவேலை கொடுப்போம். மேலும் தாலுகா வாரியாக மீட்பு மறுவாழ்வு மையம் தொடங்குவோம். பா.ம.க.வுக்கு ஆதரவு தாருங்கள். உங்கள் குடும்பம் முன்னேறும். என்னால் 5 ஆண்டுகளில் அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டத்தை தீட்டி, மாற்றத்தை கொண்டுவர முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை கொண்டுவர பெண்கள் தயாராகி வருகின்றனர். இவ்வாறு அன்புமணி கூறினார்.

-அமுதவன்.

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Birthday wishes to legend Ghantasala

Read More →