Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

If Vijayakanth Comes OK, If He Doesn’t Its Double OK – DMK

By   /  February 20, 2016  /  Comments Off on If Vijayakanth Comes OK, If He Doesn’t Its Double OK – DMK

    Print       Email

dmk-500x500விஜயகாந்த்  வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால் இரட்டை மகிழ்ச்சி- திமுக தொண்டர்கள்.

விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் சேரப்போகிறார் என்ற முடிவை அவர் இன்னமும் அறிவிக்காமல் காலதாமதம் செய்வது ஆரம்பத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும் அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் தாமதம் ஒருவித சலிப்பைத் தருகிற அளவுக்கு உள்ளது. இன்று இரவு நடக்கும் மாநாட்டில் கூட்டணி அமைப்பது பற்றிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இன்று அவர் அறிவிக்காவிட்டால் மார்ச் முதல் வாரம் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள்.

InCorpTaxAct
Suvidha

விஜயகாந்த் எடுக்கும் முடிவு தமிழக அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் அவரது முடிவை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். விஜயகாந்த் எடுக்கும் முடிவு எத்தகைய கூட்டணி மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற விவாதமும் சூடாக நடந்து வருகிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை முதலில் தே.மு.தி.க.வை மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் கருணாநிதி, ஸ்டாலின் வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் விஜயகாந்த் உரிய பதில் சொல்லாததால் தற்போது அவர்கள் தே.மு.தி.க. வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என்ற மனநிலைக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டே தி.மு.க.வினர் தே.மு.தி.க.வை விட வாக்கு சதவீதம் குறைவாக உள்ள காங்கிரஸ் கட்சியை கூட்டணி சேர்த்ததாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. வரும்பட்சத்தில் 90 சதவீதம் இடங்களில் வெற்றி பெற முடியும் என்று தி.மு.க. கருதுகிறது. வராவிட்டாலும் பரவாயில்லை தேர்தல் பணிகளை தொடங்குங்கள் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி திமுகவுக்கு ஆதரவான இணையதளப் பக்கங்களில் அவர் வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால் இரட்டை மகிழ்ச்சி என்றே எழுதிவருகிறார்கள்.

DMDK_flagஎனவே விஜயகாந்த் சாதகமான முடிவு எடுத்தால் தி.மு.க. தரப்பில் மகிழ்ச்சி ஏற்படும். இல்லை என்றாலும் கவலைப்பட போவதில்லை என்ற உறுதியுடன் தி.மு.க. இருப்பதாக கருதப்படுகிறது.

அதே சமயத்தில் பாரதிய ஜனதா கட்சி தே.மு.தி.க.வை மிக மிக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. தே.மு.தி.க. வராவிட்டால் தனித்து விடப்படுவோமே? என்ற பயம் பா.ஜ.க. தலைவர்களிடம் உள்ளது. எனவேதான் அவர்கள் பா.ம.க.விடம் தொடர்பில் உள்ளனர்.

மக்கள் நலக்கூட்டணியும் விஜயகாந்தை நம்பி உள்ளது. ஆனால் விஜயகாந்த் வராவிட்டாலும் தொடர்ந்து பிரசாரத்தை நடத்த 4 கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →