Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘If  Vijayakanth  joins  BJP  his  future  will  become  a  question mark’- says D.Raja MP.

By   /  March 20, 2016  /  Comments Off on ‘If  Vijayakanth  joins  BJP  his  future  will  become  a  question mark’- says D.Raja MP.

    Print       Email

47397995‘விஜயகாந்த் பாஜகவுடன் சேர்ந்தால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்’ கம்யூ தேசியச் செயலாளர் டி.ராஜா எச்சரிக்கை.

‘எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர்கள் தான் விஜயகாந்தை நேரில் சந்தித்தார்கள். இதில் என்ன விவாதிக்கப்பட்டது என எனக்கு தெரியாது. தேமுதிக ஒரு சுதந்திரமான கட்சி என்ற நிலையில் அவர்கள் அரசியலில் செய்ய வேண்டியது என்ன? தேர்தலில் யாருடன் கூட்டு சேருவது என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர் மக்கள் நலக் கூட்டணியுடன் வந்தால் நன்றாக இருக்கும் என ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது விஜயகாந்த் தான் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.

InCorpTaxAct
Suvidha

அதேசமயம், அவருக்காக நாங்கள் காத்திருக்காமல் எங்கள் பிரச்சாரத்தை தொடர்கிறோம். எங்கள் இரு கட்சிகளின் தேசிய தலைவர்களான சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், சுதாகர் ரெட்டி, பிருந்தா காரத், ஆனி ராஜா போன்றவர்களுடன் நானும் தமிழகத்தில் தீவிரப் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன்.

மதவெறி அரசியலை முன் வைத்து, சமூக நீதிக்கு எதிராக, பெரியார், அம்பேத்கர் கொள்கை களுக்கு எதிராக செயல்படும் கட்சி பாஜக. இதனுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என நம்பு கிறேன். ஏனெனில், பாஜகவுடன் அவர் கூட்டணி சேர்ந்தால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.’ இவ்வாறு வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →