Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

IIT – Indian Institute of Technology fees raised.

By   /  April 7, 2016  /  Comments Off on IIT – Indian Institute of Technology fees raised.

    Print       Email

Test621ஐஐடி கட்டணம் உயர்த்தப்பட்டது.

சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) ஆண்டு கல்வி கட்டணத்தை 90,000 ரூபாயிலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐ.ஐ.டி துணைக்குழு கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தது.

InCorpTaxAct
Suvidha

அதேபோல், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (என்.ஐ.டி) கட்டணத்தை 70,000 ரூபாயிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதனை பரிசீலனை செய்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், ஐ.ஐ.டி நிறுவனத்தில் கல்வி கட்டணத்தை 90 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டண சலுகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள எஸ்.சி., எஸ்.டி., தலித்துகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முழு கட்டண சலுகை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., தலித்துகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 100 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →