‘மகாபாரதம்’ பற்றிய பேச்சு: சிவகுமாருக்கு இளையராஜா வாழ்த்து
‘மகாபாரதம்’ பற்றிய சிவகுமாரின் விரிவான பேச்சுக்கு, இளையராஜா தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
‘மகாபாரதம்’ குறித்து மிகவும் விரிவாக உரையாற்றி வருகிறார் சிவகுமார். அவருடைய உரை என்பது பல்வேறு திரையுலக பிரபலங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவகுமாரின் மகாபாரதம் பற்றிய பேச்சைப் பார்த்துவிட்டு இளையராஜா குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சிவகுமாருக்கு இளையராஜா அனுப்பியுள்ள குறுந்தகவலில், ”அண்ணா, நீங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தில் உங்கள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் எனக்குப் புரிகிறது. மகாபாரதம் மிகப் பெரிய இதிகாசம், கணக்கில்லா கிளைகள் கொண்டது. இதையெல்லாம் மனதில் வைத்து, எதை சொல்ல வேண்டும், எதை விடுக்க வேண்டும் என முடிவெடுத்து, பிரவாகமாக பொதுவில் பேச, மனதில் தெளிவு வேண்டும். இல்லையென்றால் கடினமே. .
நான் ஏன் எதுவும் சொல்லவில்லை என நீங்கள் யோசித்திருக்கலாம். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து நான் வாயடைத்துப் போய்விட்டேன்..
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் அண்ணா” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.