Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

I’m happy Raja Sir is taking royalty issue to a bigger stage: Madhan Karky

By   /  March 21, 2017  /  Comments Off on I’m happy Raja Sir is taking royalty issue to a bigger stage: Madhan Karky

    Print       Email

maxresdefault (1)படஅதிபர்கள், பாடலாசிரியர்கள் நோட்டீஸ் அனுப்பினால் இளையராஜாவே தனது பாடல்களை கச்சேரியில் பாட முடியாது

 

InCorpTaxAct
Suvidha

 

இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதல் குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

பாடல் காப்புரிமை வி‌ஷயத்தில் சட்டப்படி பார்க்கும்போது, இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது சரியான நடவடிக்கை. ஒரு பாடல் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் சொந்தமானது. ஆனால், நட்பு ரீதியாக பார்த்தால் நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலாக, இந்த பிரச்சினையை போனில் பேசி தீர்த்து இருக்கலாம்.

பாடல்கள் எப்போதெல்லாம் திரையரங்குகளுக்கு வெளியில் பொதுநிகழ்ச்சிகளில் மக்கள் முன்பு பாடப்படுகிறதோ, அந்த பாடலுக்கான ராயல்டி வசூல் செய்யப்பட்டு இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கு பிரித்து அளிக்கப்பட வேண்டும். ஐ.பி.ஆர்.எஸ் என்ற அமைப்பு மூலம் இந்த தொகை வசூல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இளையராஜா அந்த அமைப்பை அனுமதிக்காமல், தானே ராயல்டியை வசூல் செய்தாலும் அந்த பாடலுக்கான உரிமை முழுவதும் அவருக்கே சொந்தமானது அல்ல.

இளையராஜா இசை நிகழ்ச்சிகள் நடத்தும்போது, அங்கு இசைக்கப்படும் பாடல்களுக்கு சம்பந்தபட்ட பாடலாசிரியர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் அனுமதி பெறவேண்டும். அதில் வசூலாகும் தொகையை அவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களோ, பாடலாசிரியர்களோ, இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பினால், அவர்களுடைய முன் அனுமதி இல்லாமல் கச்சேரிகளில் இளையராஜாவே தனது பாடல்களை பாட முடியாது.  இவ்வாறு மதன் கார்க்கி கூறி உள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →