‘என்னுடைய 2 ஆண்டு ஆட்சியில் ஊழலே இல்லை’- அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு மோடி பேட்டி.
“வால் ஸ்டிரீட்” பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த மோடி கூறியிருப்பதாவது:–
நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நிறைய சீர் திருத்தங்களை செய்துள்ளேன். முந்தைய ஆட்சியாளர்களால் செய்ய இயலாத சீர்திருத்தங்களை நான் அமல்படுத்தியுள்ளேன். கடந்த 2 ஆண்டுகளில் என்னால் எவ்வளவு சீர் திருத்தம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விட்டேன்.
இன்னமும் நிறைய சவால்கள் என் முன் உள்ளன. முக்கியமாக அன்னிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளேன். மேலும் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்துகிறேன். எந்த ஒளிவு, மறைவும் இல்லை.
நான் மேற்கொண்ட சீர்திருத்தங்களால் ஊழல் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரகப்பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் தொழில் தொடங்குவது அரிதாக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அது அமல்படுத்தப்பட்டால் இந்திய பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டும்.
இந்தியா முன்பு ஒரு ஓரத்தில் ஒரம்கட்டப்பட்டு கிடந்தது. இப்போது நிலைமை மாறி விட்டது. இந்தியா நிமிர்ந்து நிற்கிறது. மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை நாங்கள் உண்மையாக்கியுள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதற்கிடையே பிரதமர் மோடி மீது டெல்லி மாநில முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். பா.ஜ.க.வின் 2–ம் ஆண்டு கொண்டாட்டம் மற்றும் விழாக்கள், விளம்பரத்துக்கு ரூ.ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டு இருப்பதாக அவர் புகார் கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.