Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

In 70 years history this is the first time Congress survives without leader in Tamil Nadu.

By   /  July 21, 2016  /  Comments Off on In 70 years history this is the first time Congress survives without leader in Tamil Nadu.

    Print       Email

Flag_of_the_Indian_National_Congress.svg70 வருட காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் இல்லாமல் கட்சி இருப்பது இதுதான் முதல் தடவை. தொண்டர்கள் குமுறல்.

தமிழக காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக கட்சி செயல்பாடு முடங்கி சத்யமூர்த்தி பவனும் வெறிச்சோடி கிடக்கிறது.

InCorpTaxAct
Suvidha

தலைவராக யார் இருந்தாலும் சரி சத்யமூர்த்தி பவன் படிப்படியாக இயங்கும். தலைவரின் ஆதரவாளர்கள், தலைவரை பார்க்க வருபவர்கள் என்று வந்து குவியும் தொண்டர்களால் சத்யமூர்த்தி பவன் எப்போதும் கலகலப்பாகவே காணப்படும்.

தற்போது களை இழந்து கிடக்கிறது. கடந்த மாதம் 13-ந்தேதி இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 37 நாட்கள் ஆகியும் இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

70 ஆண்டுகால காங்கிரஸ் கட்சி வரலாற்றில் தலைவர் இல்லாமல் கட்சி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக மாநில தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ அல்லது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டாலோ புதிய தலைவரை நியமிக்கும் வரை அந்த தலைவர் நீடிப்பார்.

ஆனால் இளங்கோவனுக்கு மேலிடம் ஏதும் சொல்லவில்லை. அதனால் அவரும் எதையும் கண்டு கொள்ளாமல் வலம் வருகிறார்.

கடந்த 15-ந்தேதி சத்யமூர்த்தி பவனுக்கு காமராஜ் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். இளங்கோவன் அங்கிருந்த தலைவர் நாற்காலில் அமர மறுத்து தொண்டர்களுடன் ஒரு நாற்காலியில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி மேலிடம் குஜராத் பிரச்சனை, மேற்கு வங்க பிரச்சனை, உத்திரபிரதேச பிரச்சனை என்று பல மாநில பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகிறது.

எனவே தமிழக தலைவர் பதவியை பற்றி டெல்லி மேலிடம் அதிக கவனம் செலுத்துவதாக தெரியவில்லை என்று கட்சியினர் புலம்புகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தலைவர் இல்லாமல் கட்சி இருப்பது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →