Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

In Srilanka Sarath Fonseka Joins Ruling Party, Will be made minister

By   /  February 5, 2016  /  Comments Off on In Srilanka Sarath Fonseka Joins Ruling Party, Will be made minister

    Print       Email

sarath-fonsekaஇலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி ஆளுங்கட்சியில் சேர்ந்து அமைச்சராகிறார்.

இலங்கையில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா (வயது 65). விடுதலைப்புலிகளை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்த இவர் பின்னர் அரசியலில் இறங்கி, ஜனநாயக கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், அவர் இலங்கையை ஆளும் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியில் சேர்ந்தார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

InCorpTaxAct
Suvidha

இதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா, அடுத்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகி, மந்திரி ஆவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்த் ராத் அல் உசேன் இந்த வாரம் கொழும்பு வருகிறார்.

இந்த நிலையில் ஆளும் கூட்டணியில் தனது கட்சியை இணைத்தது குறித்து சரத் பொன்சேகா, கொழும்பு நகரில் நிருபர்களிடம் பேசுகையில், “நான் எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என ஏற்கனவே கூறி உள்ளேன். எங்களிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை” என கூறினார்

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →