Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

‘In  the  last  Parliament election  they created a hallucination that Jayalalitha will become PM  and got  more  votes’.- clarifies Jawadekar

By   /  March 31, 2016  /  Comments Off on ‘In  the  last  Parliament election  they created a hallucination that Jayalalitha will become PM  and got  more  votes’.- clarifies Jawadekar

    Print       Email

87d78b3a-fe71-4e0f-90f2-2a29294bca27_S_secvpf‘பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாதான் பிரதமர் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கினார்கள் அதனால் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன’- மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்.

தமிழக தேர்தல் சம்பந்தமாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காக சென்னை வந்த மத்திய அமைச்சர் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

தமிழக பாரதீய ஜனதாவின் தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. எங்கள் கட்சிக்கு கூட்டணி அமையவில்லை என்று கூறமுடியாது.

.நாங்கள் இப்போது எங்களோடு இருக்கும் தோழமை கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் 2 நாட்களில் உடன்பாடு ஏற்படும்.

.மத்திய மந்திரி பியுஸ் கோயல் தேர்தலுக்காக மாநில அரசை குறைகூற வில்லை. அவரது துறையில் நடந்ததைத்தான் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அரசியலில் நாங்கள் யாரையும் எதிரிகளாக பார்ப்பது இல்லை. போட்டியாளர்களாகவே பார்க்கிறோம்.

நாட்டின் ஓட்டு மொத்த வளர்ச்சி. ஊழலற்ற நிர்வாகம் என்பதன் அடிப்படையில் தான் மக்களை சந்தித்து வருகிறோம். ஆனால், தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாதான் பிரதமர் ஆவார் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதனால் மக்கள் ஆதரவு அவரது பக்கம் இருந்தது.

ஆனால், பா.ஜனதா தனியாக 282 தொகுதிகளில் வெற்றி பெற்றதை யாரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அரசியலில் கொள்கை ரீதியாகவே விமர்சனம் செய்கிறோம். மோடியின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →