Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Income tax seized documents released:  Chief Minister & Ministers names appeared.

By   /  April 8, 2017  /  Comments Off on Income tax seized documents released:  Chief Minister & Ministers names appeared.

    Print       Email

201704081737152110_vijayba._L_styvpfவருமான வரி சோதனையில் சிக்கிய ஆவணங்கள் வெளியானது: முதல்வர்-அமைச்சர்கள் பெயர்கள் உள்ளன

 

InCorpTaxAct
Suvidha

 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பையும் மீறி பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. இந்த பரபரப்பான இந்த சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல், விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, எம்.எல்.ஏ.க்கள் விடுதி, சரத்குமார் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

201704081737152110_palanisamy._L_styvpfஇந்த சோதனையில், ரூ.89 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதன்பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன. இந்த ஆவணங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட 6 அமைச்சர்களின் பெயர்களும் உள்ளன. பணப்பட்டுவாடா தொடர்புடைய தகவலும் அதில் உள்ளன.

201704081737152110_jayaa._L_styvpfதற்போது வெளியாகியிருக்கும் ஆவணங்களின்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.89 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. இந்த ஆவணங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →