இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம். கேப்டன் அப்ரீடியின் உருவபொம்மைகள் எரிப்பு.
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் தோற்ற தால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆத்திரம் அடைந்தனர். பாகிஸ் தான் கேப்டன் அப்ரீடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அவரது உருவபொம்மையையும் எரித்தனர்.
இந்தியா – பாகிஸ்தான் அணி களுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. ஒரு ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் மோதுவதால் பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போட்டியை காண மிகவும் ஆவலாக இருந்தனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பொது இடங்களில் ஒன்றுகூடி பெரிய திரைகளில் இப்போட்டியை கண்டு ரசித்தனர். ஆனால் இப்போட்டியில் இந்தியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றதும் ரசிகர்களின் உற்சாகம் ஏமாற்றமாக மாறியது. போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் அப்ரீடி, “இந்தியாவிடம் தோற்றது ஒன்றும் பெரிய விஷயமல்ல” என்று கூறியது அந்நாட்டு ரசிகர்களை மேலும் கோபமடைய வைத்தது.
இதைத்தொடர்ந்து பல இடங்களில் ஒன்றுதிரண்ட அவர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பல இடங்களில் டிவி பெட்டிகளை உடைத்தனர். அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் சில இடங்களில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரீடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி அவரது உருவ பொம்மைகளைக் கொளுத்தினர்.
ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், இந்தியாவுக்கு எதிரான தோல்வியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப், “பேட்டிங்குக்கு சாதகமல்லாத ஆடுகளங்களில் ஆட பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரியவில்லை. இதுபோன்றஆடுகளங்களில் எப்படி ஆடவேண்டும் என்பதற்கு விராட் கோலி சிறந்த உதாரணமாக திகழ்கிறார்” என்றார்.
மற்றொரு முன்னாள் கேப்டனான ரஷித் லதீப், “தோற்பது பெரிய விஷயமல்ல. ஆனால் எப்படித் தோற்றோம் என்பதுதான் முக்கியம்.பாகிஸ்தான் வீரர்கள் ரன் அவுட் ஆன விதம் கவலை அளிப்பதாக உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார். மிஸ்பா உல் ஹக், அப்துல் காதிர் ஆகியோரும் பாகிஸ் தான் அணியை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித் துள்ளனர்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.