Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

India targets 10 plus Medals in Olympics – Central Minister.

By   /  April 28, 2016  /  Comments Off on India targets 10 plus Medals in Olympics – Central Minister.

    Print       Email

416245-sarbananda-sonowal-700ஒலிம்பிக்ஸில் 10க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெறுவதுதான் இந்தியாவின் இலக்கு –மத்திய அமைச்சர் பேச்சு.

ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோடிஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து பாராளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வெல்ல வேண்டும் என்பதே மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் இலக்காகும்.

InCorpTaxAct
Suvidha

ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படக்கூடிய இந்திய வீரர்-வீராங்கனைகளை அடையாளம் காண அனுராக் தாகூர் தலைமையில் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய கமிட்டி கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 110 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்கள் என்று அடையாளம் காணப்பட்ட வீரர்களில் இதுவரை 76 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். இன்னும் பலர் தகுதி இலக்கை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் முன்பை விட அதிக அளவிலான வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 60 பேர் தான் கலந்து கொண்டனர். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அமைச்சகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து இருப்பதால் ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றியையும், மகிழ்ச்சியையும் அதிகமாக அளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →